- by Editor
- 2 years ago
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானாவில் என்.டி.ஏ. கூட்டணியின் அமோக ஆதரவு
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு
(என்.டி.ஏ.) மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நான் இன்று ஜக்டியால், ஷிவ்மோகாவில் பிரச்சாரம் செய்கிறேன். மாலை கோவையில் வீதிப் பேரணியில் பங்கேற்கிறேன். தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்.டி.ஏவுக்கு பலத்த ஆதரவு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று, ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.
தொடர்ந்து இன்று கர்நாடகாவின் சிவமோகாவில் பிரதமர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை அவர் தமிழகம் வருகிறார். 2024 தொடங்கியதில் இருந்து பிரதமர் தமிழகம் வருவது இது 6வது முறை. கோவையில் ரோடு ஷோ, சேலத்தில் நாளை பொதுக்கூட்டம் என பிரதமர் பங்கேற்கிறார்.
தென் மாநிலங்களைக் குறிவைத்து பிரதமர் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் சூழலில், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்.டி.ஏவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .