Sunday, October 4, 2026

தமிழின அழிப்பின் நினைவாக பிரான்ஸில் நினைவுக்கல் திறப்பு


பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் seine-saint-denis நnளை மாவடத்தில் உள்ள பொபிணி Bobigny  நகர சபையால் தமிழின அழிப்பின் நினைவாக சமாதானத்தைக் குறிக்கும் ஒலிவ் மரம் நாட்டப்பட்டு நினைவுக் கல்லும் திறந்துவைக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் நினைவுக்கல்லை Bobigny பொபினி நகர பிதாவும் seine-saint-denis மாவட்ட சபை உறுப்பினருமான abdel sadi  திறந்துவைத்தார்.

குறித்த நினைவுக்கல்லில், ஸ்ரீலங்கா அரசால் 1948 முதல் 2009 மே மாதம் வரை இனவழிப்பு செய்யப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக” என்ற வாசகங்கள் பிரஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தன.

நகர சபை மேயர் abdel sadi உரையாற்றும்போது, பொபினி நகர சபையில் 2021 தமிழின அழிப்பை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியதையும், பொபினி நகரம் தமிழ் மக்களின் நீதியை வென்றெடுக்கத் துணை நிற்பதையும் சுட்டிக்காட்டினார்.

you may also like