- by Editor
- 1 year ago
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார் தவராசா
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் தான் விலகுகின்றார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தான் விலகுகின்றார் என்று அவர் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தபோது அதில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காகத் தொடர்ச்சியாகப் பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.