Thursday, October 8, 2026

தமிழகத்தில் புதிய முதலீடுகளை முன்னெடுக்கும் ஐக்கிய அமீரகம்



சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌத் அல்மரி சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் தலைமைச் செயலகத்தில் நேற்று இன்று ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் எச்.இ.அப்துல்லா பின் தௌத் அல்மரியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், வேலை உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை, மலிவு வீடுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் வணிகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை பற்றி விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

you may also like