- by Editor
- 5 months ago
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வொஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
அப்போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ட்ரம்பை வொஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜேர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் ஜெலன்ஸ்கியோடு இணைந்து அதிபர் ட்ரம்பை சந்திப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.