- by Editor
- 4 months ago
ட்ரம்ப்பிற்கு மருத்துவ பரிசோதனை - வெளியான தகவல்!!
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
ட்ரம்ப்பிற்கு மருத்துவ பரிசோதனை - வெளியான தகவல்!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலில் காணப்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு நிலை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது குறித்து வெள்ளை மாளிகை மருத்துவர்கள் குறிப்பிடுகையில்,
பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் நரம்பு ரீதியான பாதிப்பு இது என்று வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஊடகங்களுக்கு பகிர்ந்தார். “ரத்த உறைவு, இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நல கோளாறு சார்ந்த எந்த அறிகுறியும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இல்லை” எனவும் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.