Friday, October 9, 2026

டில்லி முதல்வர் கேஜ்ரிவால் இராஜினாமா; ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஆதிஷி!


துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் ஆதிஷி உரிமை கோரினார்.

டில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை நேற்று பிற்பகல் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்தார். அப்போது, அவர் தனது இராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து, கேஜ்ரிவாலுடன் சென்ற ஆதிஷி, ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரினார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அவர் துணைநிலை ஆளுநரிடம் வழங்கினார்.


you may also like