Friday, October 9, 2026

டிசம்பரில் இந்தியா செல்கின்றார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்


எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிசம்பர் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரஷ்ய பயணத்தின் போது, புடின் இந்திய வருகையில் இணைவார் என்று குறிப்பிடப்பட்டது, ஆனால் நேரம் குறித்து எந்த அதிகாரபூர்வ குறிப்பும் இல்லை.

இருப்பினும், சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்தனர்.

இரு தலைவர்களும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ஏற்கனவே இந்தியா மீது வரிகளை விதித்துள்ளது.

இதுபோன்ற சூழலில், ரஷ்ய ஜனாதிபதியின் வருகை இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகளை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.


you may also like