- by Editor
- 1 year ago
ஞானசார தேரர், ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட 11 பேருக்கு விசேட பாதுகாப்பா? வெளியான உண்மைத் தகவல்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
பதினொரு முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (14) ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசேட பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எவருக்கும் விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.