Sunday, October 4, 2026

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கும் குருமார்கள் ஆதரவு


இந்து குருமார்கள் குழுவினரை ஜனாதிபதி இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் இனவாத மோதல்களுக்கு இடமளிக்காமல், அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு இந்து குருமார்கள் தமது ஆசிகளை வழங்கியுள்ளனர்.

அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதித்து வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்து குருமார்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய முறையான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்து அறநெறிப் பாடசாலைகளை நடத்துதல் உள்ளிட்ட இந்து பக்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like