Thursday, October 8, 2026

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயார்: ரொஷான் அதிரடி அறிவிப்பு


"இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டால் நான் நிச்சயம் அந்தத் தேர்தலில் போட்டியிடுவேன்."

- இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் ஓமல்பே சோபித தேரரை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ரொஷான் ரணசிங்க இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கையின் அரசியலில் நான் தொடர்ந்தும் தனித்துச் செயற்படுவேன்.

என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் திட்டங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் யோசிக்க முடியும்.

எனக்கு எதிர்க்கட்சியுடன் இணைய வேண்டிய தேவை இல்லை. முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்றும் பணிகளை மாத்திரம் தற்போது நான் முன்னெடுத்து வருகின்றேன்." - என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ரொஷான் ரணசிங்க விலகியமை ஒரு சிறந்த தீர்மானம் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


you may also like