- by Editor
- 1 year ago
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - ட்ரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிலடி
-
- by Editor,
- 5 months ago
- in இந்திய செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்வில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது அங்கு பதற்றமான சூழல் நிலவியதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப், வான்ஸ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பாதுகாப்புப் படையினரால் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், டிரம்ப், அவரது மனைவி மற்றும் துணை ஜனாதிபதி காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்தியுள்ள அவர், “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை; அது எந்த சூழலிலும் கண்டிக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
Relieved to learn that President Trump, the First Lady and Vice President are safe and unharmed following the recent security incident at a Washington DC hotel. I extend my best wishes for their continued safety and well-being. Violence has no place in a democracy and must be…
— Narendra Modi (@narendramodi) April 26, 2026