- by Editor
- 1 year ago
செப்டம்பர் 9 இல் ஆலோசனைக் கூட்டம்: ஆதரவு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இந்திய செய்திகள்
த.வெ.க. கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. ஆதரவு கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
த.வெ.க. கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு த.வெ.க. நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
த.வெ.க. அரசு அமைய ஆதரவு கொடுத்த கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், செப்டம்பர் 9 இல் நடைபெறவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1 இல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதமை குறிப்பிடத்தக்கது.