Friday, October 9, 2026

சுற்றுலாப் பயணிகள் வருகை 2 லட்சத்தைக் கடந்துள்ளது


தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் மாத்திரம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 350 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தைக்கு றிப்பிட்டுள்ளார்.

2023 இல், ஒரு லட்சத்து 639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 100 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 352 சுற்றுலாப் பயணிகளும், ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

you may also like