Wednesday, October 7, 2026

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் முதன்முறையாகக் பங்கேற்ற ஜே.வி.பி.


மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் முதன்முறையாகச் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தாம் தொடர்ந்தும் பங்கேற்றது அது தமது கடமை என்பதால் என்று சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக எம்.பி., ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒருபோதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, ஹர்ஷ டி சில்வா, சமிந்த்ராணி கிரியெல்ல, வி.இராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


you may also like