- by Editor
- 3 months ago
சீன நிலக்கரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலக்கரி தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான கட்டடத்திலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் சிக்குண்டிருந்த 63 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாங்க்சி மாகாணம் என்பது சீனாவின் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.