Friday, October 9, 2026

சீனியைப் பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை யாழ் மாவட்டத்தில் ஏற்படுத்த சிலர் முயற்சி!


யாழ் மாவட்டத்தில் சிலர் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பிலும் பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

you may also like