Thursday, October 8, 2026

சாதனைகள், கொள்கை இல்லாதவர்களே ஆபாசங்களை அள்ளி இறைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு


சாதனைகளும், கொள்கைகளும் இல்லாதவர்களே ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியமைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

 “இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.


you may also like