Sunday, October 11, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்கள் கௌரவிப்பு


சர்வதேச மகளிர் தினம் - 2025 ஐ முன்னிட்டு வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தால் பெண் சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தினம் - 2025 நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாணாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ துறை பேராசிரியர் திருமதி ம.அ.சாந்தகுமாரி, சிறப்பு விருந்தினராக காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணiயாளர் திருமதி மாதுகி சஜீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டு தெரிவு செய்யப்பட்ட பெண் சாதனையாளர்கள் ஆறு பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

விளையாட்டுத்துறை சார்பில் பளுதூக்குதல் வீராங்கனை செல்வி சாணுஜா கோபாலகிருஸ்ணன், பாரம்பரிய கலை பிரிவில் உடுக்கு கலைஞரான திருமதி ஆனந்தி கணேசன், தற்பாதுகாப்புக் கலை பிரிவில் கராத்தே விராங்கனை திருமதி மாலதி முரளி, மாற்றுத்திறனாளி பிரிவில் சுயதொழில் முயற்சியாளர் திருமதி ராஜேஸ்வரி ஞானக்குமரன், யோகா கலை பிரிவில் திருமதி பத்மலோசனா அதிரூபசிங்கம் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர் திருமதி மோனறஞ்சன் தர்சினி ஆகியோர் இவ்வாறு பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

you may also like