Thursday, October 8, 2026

சர்வதேசத்திடம் நீதி கோரி கிளிநொச்சியில் பேரணி!


வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சியில் அடையாளப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி பேரணி முற்பகல் 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து முற்பகல் 11.30 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சர்வதேச நீதி கோரி கோஷம் எழுப்பினர். 

you may also like