Friday, October 9, 2026

சமனல வாவியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!


பலாங்கொடை - சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் சிலருடன் நேற்று  நீராடச்சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வென்னப்புவயை சேர்ந்த 29 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

you may also like