Thursday, October 8, 2026

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா கோலி?


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டி நேற்று (22) தரம்சாலாவில் இடம்பெற்றது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய இந்த போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி 95 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இந்த போட்டியில் கோலி 100 ஓட்டங்களை கடந்திருந்தால், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49ஆவது சதத்தை பதிவு செய்திருப்பார்.

இவர் இதுவரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 48 சதங்களை கடந்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பதிவு செய்துள்ளார்.

கோலி நேற்றைய போட்டியில் சதம் கடந்திருந்தாரெனில், சச்சினின் சாதனையை சமப்படுத்தியிருப்பார்.

எனினும், எதிர்வரும் போட்டிகளில் கோலி சதம் கடந்து சச்சினின் சாதனையை முறியடிப்பாரா இல்லையா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

you may also like