Sunday, October 4, 2026

க்ரிஷ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கைது


க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (24) கைது செய்துள்ளது.

கொழும்பு கோட்டையில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ‘டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கம்’ (Transworks Square) காணியை க்ரிஷ் நிறுவனத்துக்காக விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த 70 மில்லியன் ரூபாய் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்கள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே உள்ள நிலையில், அவை தொடர்பான இறுதி தீர்மானம் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே மேற்கொள்ளப்படும்.

you may also like