Sunday, October 4, 2026

கோழி இறைச்சி - முட்டை விலை குறைவடைகின்றது!


பண்டிகை காலங்களில் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனங்களுக்கான வற் எனப்படும் பெறுமதி சேர் வரி குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில், கோழியிறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.  

you may also like