- by Editor
- 2 years ago
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணி மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய அகழ்வுப் பணியின் போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டன. அத்துடன் துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டன.
இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய இலக்கத் தகடுகள் மற்றும் உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.