Thursday, October 8, 2026

'குறைவான பெறுமதிக்கு அரசங்க நிறுவனங்கள் இல்லை'


அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும். மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான தனியார் முதலீடுகளுக்கு அரச நிறுவனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அருந்திக்க பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களைக் கண்டறிந்து அவற்றை ஒழுங்கான முறையில் பராமரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, ஹில்டன் ஹோட்டல் போன்ற நிறுவனங்களுக்கு அந்த முதலீடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பெற்று, அதன் மூலம் அரசாங்க திறைசேரியைப் பலப்படுத்தவும், ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கவும், நிறுவனத்தை ஒழுங்கான முறையில் பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடுகளுக்கு அரசின் மதிப்பீட்டை விட அதிக பெறுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு மதிப்பீட்டுப் பெறுமதிக்கு கீழ் தனியார் முதலீடுகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறைவான விலையில் அரச நிறுவனத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றார். 

you may also like