Sunday, October 4, 2026

கிளிநொச்சியில் ரயில் மோதி ஒருவர் பலி!


கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரக்க் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவர் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இன்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் காயமடைந்தவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் முன்னதாகவே விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, விபத்துத் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


you may also like