- by Editor
- 2 years ago
கிளிநொச்சியில் கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை - நான்காம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது கார் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அதில் பயணித்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.