- by Editor
- 2 years ago
காலியில் மூவர் சுட்டுக்கொலை!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
காலி - ஹினிதும பனங்கல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி - 56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.