Tuesday, October 13, 2026

கான்ஜூரிங் கண்ணப்பன் கூட்டணி மீண்டும் இணைந்தது - சந்தானம் நடிப்பில் உருவாகும் 'லவ் பைட்'


‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர், புதியதாக இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு லவ் பைட் என பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி குழுமம் இப்படத்தை தயாரிக்கிறது.

சந்தானத்துடன் நடிகர்கள் ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு படத்தின் புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 

you may also like