Sunday, October 4, 2026

காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன்


ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன், தனது நீண்டகால காதலியான எமிலி ரெட்வுட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தைத் தொடர்ந்து, தங்களது வாழ்வின் முக்கியமான அந்த நாளில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை கேமரூன் கிரீன் மற்றும் எமிலி ரெட்வுட் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கேமரூன் கிரீன் - எமிலி ரெட்வுட் தம்பதியின் திருமணப் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

you may also like