Wednesday, October 7, 2026

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி!


காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 158 பேர் வரை காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உணவு, உடை மற்றும் சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், உலக உணவுத்திட்டம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான காசாவில உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

you may also like