- by Editor
- 1 year ago
காசாவில் அகதிகள் முகாமை சுற்றி வளைத்த யுத்த தாங்கிகள்!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமை இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பகுதியில் கடுமையான போர் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு லட்சம் பேர் வரை மருத்துவ வசதிகள் இன்றி, அந்த முகாமில் இருக்கின்றனர் என ஹமாஸ் அறிவித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடக்கு காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையவில்லை.
அதேநேரம் காசாவில் மனிதாபிமான அமைப்புகள் சீர்குலைந்து விடும் நிலை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவரது கருத்துக்களை இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எலி கோஹன் விமர்சித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதானி அன்டோனியோ குட்ரெஸின் பதவி காலம் உலக அமைதிக்கு ஆபத்தானது எனவும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.