Tuesday, October 13, 2026

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் பலி


கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


you may also like