Friday, October 9, 2026

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது


கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகரவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்களை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like