- by Editor
- 7 months ago
கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் வரத்து குறைவு
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமையினால், சந்தையில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் காரணமாகவே மீன் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் (04) பேலியகொட சந்தையில் ஒரு கிலோகிராம் சலாயா - ரூ. 1,000 ஆகவும், லின்னா ஒரு கிலோ கிராம் 1,200 ரூபாவாகவும், கெலவல்லா ஒரு கிலோ கிராம் 1,600 ரூபாவாகவும் தோரா ஒரு கிலோ கிராம் 3,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது
இதேவேளை, சந்தைக்கு மீன் வரத்து குறைவடைந்துள்ளதால், சந்தைகளில் சில்லறை விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.