Saturday, October 10, 2026

கச்சதீவில் யார் வசிக்கிறார்கள்? காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்


 “கச்சதீவில் யார் வசிக்கிறார்கள் என கேள்வி கேட்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் பாலைவனத்தில் யாரும் வசிக்காததால் அதனையும் கொடுத்துவிட துணியுமா?”

- இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜஸ்தானின் கரோலி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கச்சதீவில் யாராவது வசிக்கிறார்களா என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவில் யாராவது வசிக்கிறார்களா என காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. அப்படி என்றால், யாரும் வசிக்காத இடம் என்றால், அதனை கொடுத்துவிட காங்கிரஸ் துணியும் என அர்த்தமா? ராஜஸ்தானில் பாலைவனம் உள்ளது. இது குறித்து காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது? இதற்கு யாராவது உரிமை கோரினால் காங்கிரஸ் என்ன சொல்லும்?

நாட்டுக்கு சேவை செய்வது இதுதானா? இதுதான் காங்கிரஸின் மனநிலை. நாட்டில் மக்கள் வசிக்காத இடத்தைப் பொறுத்தவரை, அது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம். ராஜஸ்தானின் இடத்தைக் கூட அவர்கள் அப்படியே விட்டுக் கொடுக்கலாம்." - என்றார்.


you may also like