Saturday, October 10, 2026

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ரொனால்டோ


போர்த்துக்கல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிகஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் அளித்த பேட்டியில், 2026-27ஆம் ஆண்டு கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி பருவமாக அமையக்கூடும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக மிகப்பெரிய மரபை விட்டுச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்திய 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற பின்னர், ஓய்வு குறித்த இந்த முக்கிய முடிவை நோக்கி அவர் நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதோடு, தனக்கு மிகவும் பிடித்தமான ‘பேடல்’ விளையாட்டிலும் அதிக நேரம் செலவிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோவின் இந்த கருத்து, அவரது ஓய்வு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

you may also like