- by Editor
- 7 months ago
ஒரே தொடரில் 2 ஹட்ரிக்: கம்மின்ஸின் புதிய சாதனை!
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
இவர் கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ரஷிட் கான், கரிம் ஜன்னட் மற்றும் குல்பதின் நைப் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றுமொரு ஹட்ரிக் சாதனையை பெட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பிரட் ஹட்ரிக் சாதனை படைத்திருந்திருந்தார்.
அதற்குப் பின்னர் பெட் கம்மின்ஸ் இம்முறை அடுத்தடுத்த போட்டிகளில் 2 ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.