Wednesday, October 7, 2026

ஐ.நாவின் தங்குமிடங்களை இலக்கு வைத்த இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் பலி!


காசாவில் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையில் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான போர் 30 ஆவது நாளை கடந்து நீடித்து வருகின்றது.

வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

காசா நகருக்கு வடக்கே ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காசா நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையின் வாயிலில் நேற்று நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் தங்கும் தாக்கப்பட்டுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

இதனால், காசாவில் தற்போது மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடம் எதுவுமில்லை எனவும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலில் இருப்பிடத்தை இழந்த மக்கள், ஐ.நா கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

you may also like