- by Editor
- 2 years ago
ஏறாவூரில் 11 வயது சிறுமி கொலை - 14 வயது சகோதரன் கைது
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவமொன்றில், 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது 14 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (28) மாலை, ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆரம்பத்தில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நிகழ்ந்தபோது சிறுமியின் தந்தை வெளியூரில் பணியில் இருந்ததுடன், தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் 14 வயது சிறுவனும் அவரது 11 வயது சகோதரியும் மட்டுமே இருந்துள்ளனர்.
விசாரணைகளின் படி, கைபேசி பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன்போது ஆத்திரமடைந்த சிறுவன் தனது சகோதரியின் கழுத்தை நெரித்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பின்னர், சம்பவத்தை மறைப்பதற்காக உடலை குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.