Sunday, October 4, 2026

எரிபொருள் QR பதிவு சிக்கல்களுக்கு விசேட WhatsApp சேவை அறிமுகம்


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெறுவதற்கான பதிவு செயல்முறைகளுக்கு உதவியாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவில் சிக்கல்கள் எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு தங்களது வாகன இலக்கத்தை அனுப்புவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த தகுதியுடையவர் என்றும், வழங்கப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்களும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

you may also like