Sunday, October 11, 2026

எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு


நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார கூறுகையில், அடுத்த சில நாட்களுக்குள் கச்சா எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை வந்தடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவற்றில், ஒரு கப்பலில் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட 90,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயும், மற்றொரு கப்பலில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பெறப்பட்ட 90,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயும் கொண்டுவரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சமூகத்தில் பரவிய தவறான வதந்திகளின் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்ததாகவும் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

எனவே, பொது மக்கள் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

you may also like