- by Editor
- 3 months ago
எப்ஸ்டீன் ஆவண சர்ச்சையில் சிக்கியதால் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கேட்ஸ் உரை இரத்து
-
- by Editor,
- 7 months ago
- in உலக செய்திகள்
மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஆற்றவிருந்த உரையை இரத்து செய்திருக்கிறார்.
எப்ஸ்டீன் ஆவணங்களில் பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றதால் உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கேட்ஸ் அறநிறுவனம் தெரிவிக்கப்படுகின்றது.
மாநாட்டின் முக்கியக் கூறுகளில் கவனம் இருப்பதை உறுதிசெய்யவும் விரும்பியதாக அறநிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
பில் கேட்ஸிற்குப் பதிலாகத் தனது ஆப்பிரிக்க, இந்திய அலுவலகங்களின் தலைவர் உரையாற்றுவார் என்றது அறநிறுவனம்.
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து வருந்துவதாகத் பில் கேட்ஸ் முன்னதாக கூறி, அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
எப்ஸ்டீன் ஆவணத்தில் பில் கேட்ஸ் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.