- by Editor
- 1 year ago
எதிர்க்கட்சித் தலைவர் பெருந்தோட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"மலையக, தென் பகுதி பெருந்தோட்ட சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுடன் இப்படியான சமூக ஒப்பந்ததை எட்டியதில் மகிழ்ச்சியடைகின்றேன்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலையக, தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, பல்வேறு தோட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், சுமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எமது நாட்டுக்குப் பெரும் வளமாகக் காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்டச் சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மலையகம் மற்றும் தென் பகுதி பெருந்தோட்டத்துறையில் உள்ள சமூகத்துடன் இன்று (நேற்று) ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான மலையக மற்றும் தென் பகுதி பெருந்தோட்ட சமூகங்கள் நாட்டின் உயிர்நாடிக்கு பங்களித்து வருவதால், அவர்களை எப்போதும் கூலித்தொழிலாளிகளாகவே வைத்திருக்காது, அவர்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்குவதோடு, பெருந்தோட்டத் துறையில் பெருந்தோட்ட தொழில் முயற்சியாளர்களாக பணியாற்றும் பெரும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.
இது வரை இரண்டாம், மூன்றாம் வகுப்பினர் எனும் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்தச் சமூகத்துக்கு வார்த்தைகளோடு மட்டுப்பட்ட கோஷங்களைக் கடந்து, ஒரு குறித்த காலக்கெடுவுக்கு உட்பட்ட வகையில், இந்த மக்களை வலுவூட்ட, தெளிவான சமூக இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம்." - என்றார்.