- by Editor
- 2 years ago
எகிறும் பெட்ரோல் விலை - ஆசியாவையே உலுக்கும் புதிய பொருளாதாரப் புயல்
-
- by Editor,
- 5 months ago
- in உலக செய்திகள்
பிரெண்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 120 அமெரிக்க டொலரை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகமாக சார்ந்துள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியம் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி, இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை 5.1 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைத்துள்ளதுடன், பணவீக்க மதிப்பீட்டை 3.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தொழிற்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துத் துறையினரின் வருமானமும் குறைந்துள்ளது.
வானூர்தி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான சேவைகள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன; சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பெய்ஜிங்கில் பேசிய அவர், டீசல் மற்றும் வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவுஸ்திரேலியா தனது பங்கிற்கு நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு மற்றும் முக்கிய தாதுக்களை சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது சியோலில் உள்ள பென்னி வொங், தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் சோ ஹியூனுடன் சந்தித்து எரிசக்தி விநியோக நிலைமை குறித்து மேலதிக ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.