- by Editor
- 2 years ago
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஜூன் 2 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
அதற்கமைய உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் முதல் கூட்டம் ஜூன் 2 ஆம் திகதி கூட வேண்டும். 339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு கடந்த 06 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265 அதிகார சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 35 அதிகார சபைகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 14 அதிகார சபைகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 அதிகார சபைகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முறையே 3 அதிகார சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 அதிகார சபைகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலா ஒரு அதிகார சபையையும் பெற்றுக்கொண்டன. 4 சுயேட்சைக் குழுக்கள் தலா ஒரு அதிகார சபைகளைக் கைப்பற்றிக்கொண்டன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 75,589 பேர் போட்டியிட்டனர்.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் முடிவடைந்து 21 நாள்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செலவு விவரத் திரட்டை உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்து.