- by Editor
- 6 months ago
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு
-
- by Editor,
- 5 months ago
- in உலக செய்திகள்
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இதுவரை உறுதியற்ற நிலையில் இருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.