Sunday, October 11, 2026

உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது பதுளையைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருக்குக் கடந்த வியாழக்கிழமை இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்தது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

you may also like