- by Editor
- 2 years ago
ஈராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றம்
-
- by Editor,
- 4 days ago
- in உலக செய்திகள்
ஈராக்கிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறவுள்ள நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
அணு ஆயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை ஈராக் ரகசியமாக தயாரித்து வருவதாகக் கூறி, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ராக்கின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கப் படைகள் அந்நாட்டில் தொடர்ந்து நிலைக2003ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தன.
இதன் பின்னர் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசைன் கைது செய்யப்பட்டு, 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
போருக்குப் பின்னர் ஈராக்கின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கப் படைகள் அந்நாட்டில் தொடர்ந்து நிலைகொண்டிருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின் காலத்தில், ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை படிப்படியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி முன்னெடுக்கப்பட்ட படை வெளியேற்ற நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முக்கிய அமெரிக்க இராணுவத் தளமான அல்-அசாத் விமானப்படைத் தளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறவுள்ளமை ஈராக்கின் பாதுகாப்பு நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் ஈரானுக்கும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கும் சாதகமான மாற்றமாக அமையக்கூடும் எனவும், இதன் மூலம் ஈராக்கில் ஈரானின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு செல்வாக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் ஈராக்கின் பாதுகாப்பில் வெற்றிடம் ஏற்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. இந்த நிலைமையை பயன்படுத்தி ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் மீண்டும் செயற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள குர்திஷ் தன்னாட்சிப் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், வெளிப்புற தலையீடுகளையும் சமாளிக்கும் பொறுப்பு ஈராக் அரசாங்கத்திற்கு மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.